ஜனாதிபதியாக பதவியேற்றதும் புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் - ஜோ பைடன் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

ஜனாதிபதியாக பதவியேற்றதும் புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் - ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவியேற்றதும் புதிய குடியேற்ற மசோதாவை உடனடியாக அறிமுகப்படுத்துவேன் என ஜோ பைடன் கூறினார்.‌

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் பதவிக்கு வந்த முதல் நாளிலிருந்து நாட்டின் குடியேற்ற கொள்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.

அவர் பதவிக்கு வந்ததும் தனது முதல் உத்தரவாக முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்தார்.

அதேபோல் இந்தியர்கள் பெருமளவு பயனடையக்கூடிய 'எச் 1 பி' 'எச் 4' போன்ற விசாக்களை பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.

இதனிடையே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், டொனால்ட் டிரம்பின் குடியேற்ற கொள்கைகள் மிகவும் கொடூரமானவை எனக் கூறியதோடு நான் பதவிக்கு வந்ததும் பழைய நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில் டெலாவர் மாகாணத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் தான் பதவியேற்றதும் உடனடியாக குடியேற்ற சட்டத்தை அறிமுகப்படுத்துவேன் என கூறினார்.‌

இது குறித்து அவர் கூறுகையில, “நான் உடனடியாக ஒரு குடியேற்ற மசோதாவை அறிமுகப்படுத்தி, அதனை செயல்படுத்த பொருத்தமான குழுக்களுக்கு அனுப்பி வைப்பேன்” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad