கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 9, 2021

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களையும் அவற்றின் ஊடான வாய்ப்புக்களையும் திருகோணமலை மாவட்ட மக்கள் சரியான முறையில் பயனபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகதனதில் நேற்று (09.01.2021) இடம்பெற்ற உள்நாட்டு கிராமிய கைதொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்கான குழுவின் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொர்ந்தும் உரையாற்றுகையில், கிராமிய ரீதியில் மக்களின் வாழ்கைத் தரத்தினை முன்னேற்றும் நோக்கில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தேசிய திட்டத்தின் ஓர் அங்கமாக இன்றைய தினம் நடைபெற்று வருகின்ற கலந்தாய்வுக் கூட்டம் திருகோணமலை மாவட்டத்தின் மீள் எழுச்சிக்கான ஆரம்பம் என்று தெரிவித்ததுடன், இவ்வாறான சந்தர்ப்பங்களை மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களை அரச அதிகாரிகள் சரியான முறையில் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்டுள்ள மூன்று குழுக்கள் மாவட்ட ரீதியில் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்ற நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் செயற்பட்டு வருகின்ற 

உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்கான குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் திருகோணமலையில் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment