நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே கட்டடத் தொகுதியில், அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, January 23, 2021

நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே கட்டடத் தொகுதியில், அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மஹிந்த

கொழும்பு அளுத்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதிகளில் இடப்பற்றாக்குறை மற்றும் நீதிமன்றங்கள் சேமடைந்த நிலையில் காணப்படுவதால் ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத்திட்டத்திற்கமைய நவீன யுகத்திற்கேற்ப புதிய கட்டத் தொகுதியை அமைப்பதற்கான அடிக்கல் நீதி அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திங்கட்கிழமை நாட்டப்படவுள்ளது.

ஏற்கனவே, நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பத்தை (டிஜிட்டல் மயமாக்கல்) மூலம் நீதிமன்றங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த நான்கு மாதங்களில் 40 சட்டங்களைத் திருத்துவதற்கான திருத்தச் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு மக்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாக சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் நீதி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அதன் பிரகாரம் வினைத்திறன் வாய்ந்த சேவையை வழங்குவதற்கு அனைத்து நீதிமன்றங்களை ஒரே கட்டடத் தொகுதிக்குள் உள்ளடக்கும் வகையில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 16,500 மில்லியன் ரூபா நிதி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8 குற்றவியல் மேல் நீதிமன்றங்கள், 4 வணிக மேல் நீதிமன்றங்கள், ஒரு சிவில் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றம், 10 மாவட்ட நீதிமன்றங்கள், 6 தொழில் பிணக்குகளை தீர்க்கும் நீதிமன்றங்கள், 2 குவாசி நீதிமன்றங்கள், சிறுவர் உரிமை கோரல் நீதிமன்றம் மற்றும் விசாரணைக்கு முந்திய நீதிமன்றமும் இந்தக் கட்டத்தொகுதியில் அமைக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment