மரக்கறிகளின் விலை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, January 30, 2021

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

மழையுடனான வானிலை காரணமாக பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்படும் மரக்கறிகள் குறைவடைந்துள்ளமையினால் விலைகள் அதிகரித்துள்ளது.

இதற்கிணங்க, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் பூசணிக்காயின் விலை 240 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் சோளம் 140 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

இதேவேளை, பீட்ரூட் 240 ரூபாவிற்கும் கேரட் 230 ரூபாவிற்கும் லீக்ஸ் 130 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளின் வரவு சீராகும் வரை இந்த விலையேற்றம் தொடரும் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment