தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நோர்வுட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் இன்று சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை மோரா தோட்டத்தில் ஒருவரை தாக்கியதாக நோர்வுட் பிரதேச சபையின் தலைவருக்கு எதிராக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலைக் கண்டித்தும் சந்தேகநபரை கைது செய்யுமாறு கோரியும் பொகவந்தலாவை லட்சுமி தோட்டத்தில் மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரதேச சபைத் தலைவர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment