அம்பலாங்கொடை - உஸ்முதுலாவ கிராமிய வங்கியில் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைக் கவசம், மேலங்கி அணிந்து வந்த சந்தேகநபர் வங்கியின் முகாமையாளரை மிரட்டி பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேகநபர் வங்கியில் இருந்து 1,36,000 ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதான குறித்த சந்தேகநபர் விமானப்படை சிப்பாய் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வசமிருந்த வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டும் உள்நாட்டு கைக்குண்டு ஒன்றும் விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
No comments:
Post a Comment