(எம்.எப்.எம்.பஸீர்)
போதைப் பொருள் கடத்தல், வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி, அனுராதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில், அனுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 5 தொலைபேசிகள் மீட்கப்பட்டதாகவும், அது தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கைகளின் போது வெளிப்பட்ட தகவல்களுக்கமைய பொலிஸ் பரிசோதகரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் 43 வயதுடையவர் என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன, சந்தேக நபரை 7 நாட்கள் அனுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் பொறுப்பில் தடுத்து வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறவுள்ளதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment