மட்டக்களப்பு - அரசடி கிராம சேவகர் பிரிவில் மூவருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

மட்டக்களப்பு - அரசடி கிராம சேவகர் பிரிவில் மூவருக்கு கொரோனா

தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு நகர் அரசடி கிராம சேவகர் பிரிவில் இன்று (18.01.2021) 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 03 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மூர் வீதியில் உயிரிழந்த 79 வயது முதியவர் ஒருவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அந்த கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டதுடன் உயிரிழந்த குறித்த நபரின் வீட்டில் உள்ளவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 05 பேருக்கு தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று திங்கட்கிழமை குறித்த பகுதியைச் சோ்ந்த 100 பேருக்கு மாநகர சபை பொதுச் சந்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக 03 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment