தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 பெண்களும், 41 ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்.
கைதின்போது மூன்று இளைஞர்கள் போதைப் பொருள் வைத்திருந்ததாக தெரிவித்த பொலிஸார், அவர்களுக்கு எதிராக வழக்கு ஹிங்குராங்கொட நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினர்.
நேற்று மாலை இடம்பெற்ற கைதின் பின்னர் இவர்களுள் 38 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.
No comments:
Post a Comment