46 நாள் தொடர் தனிமைப்படுத்தல் முடக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் விடுவிக்கப்பட்ட கிராமம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 22, 2021

46 நாள் தொடர் தனிமைப்படுத்தல் முடக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தால் விடுவிக்கப்பட்ட கிராமம்

தொடர்ச்சியாக தமது கிராமத்தை 46 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்தமைக்காக அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படல்கும்புரைப் பகுதியின் அலுப்பொத்தை முஸ்லிம் கிராமத்தில் கொரோனா நோய்த் தொற்று அபாயம் எதிர்நோக்கப்படுவதாக பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்து தொடர்ச்சியாக 46 நாட்களாக அக்கிராமத்தை தனிமைப்படுத்தி முடக்கி வைத்தமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அலுப்பொத்தை கிராமம் தொடர்ந்து தனிமைப்படுத்தி, முடக்கப்பட்டமையினால் அக்கிராம மக்கள் தமது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர். 

இதனை வெளிப்படுத்தும் முகமாக, ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மேலிட உத்தரவின் பேரில் பொது சுகாதாரப் பிரிவினரால் அலுபொத்தை கிராமம் தனிமைப்படுத்தலிருந்தும் முடக்கப்பட்டதிலிருந்தும் முற்றாக விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment