அமெரிக்காவுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - உத்தரவு பிறப்பித்தார் ஜனாதிபதி ஜோ பைடன் - News View

About Us

About Us

Breaking

Friday, January 22, 2021

அமெரிக்காவுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - உத்தரவு பிறப்பித்தார் ஜனாதிபதி ஜோ பைடன்

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு 26ம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற உடன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக கொரோனா வைரசை கட்டுப்படுத்த அவர் அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அமெரிக்காவில் அனைவரும் 100 நாட்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி பைடன் உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்காவுக்கு வரும் முன்னர் விமான நிலையத்திலேயே கொரோனா இல்லை என்ற சான்றிதழை பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பயணிகளும் மத்திய நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பின் விதிகளை பின்பற்றி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். 

அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தகவலை பைடன் தெரிவிக்கவில்லை. ஆனால், மத்திய நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. 

எத்தனை நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முழுமையான விவரம் தற்போதுவரை வெளியாகவில்லை. இந்த சுய தனிமைப்படுத்தல் நடைமுறை ஜனவரி 26ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment