சமூக ஊடகங்களை பதிவு செய்யும் போலிக் காரணத்தின் கீழ் சமூக ஊடக செயற்பாடுகளை அடக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும், ஊடகத் துறை அமைச்சரின் அறிவிப்பில் இது புலப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடக சுதந்திரத்திற்காக தானும், ஐக்கிய மக்கள் சக்தியும் நிபந்தனையின்றி முன் நிற்பார்கள் என்று கூறிய அவர், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பேச்சு, எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சிகளில் அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடுவதாக கூறினார்.
மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், சமூக ஊடங்களில் தன்னை எண்ணிலடங்கா விதமாக விமர்சித்து, ஏச்சுப் பேச்சுக்கள் தெரிவித்திருந்தாலும் தாம் ஒருபோதும் ஊடக சுதந்திரத்தை எதிர்க்க மாட்டேன் என்றும் அதை மீறும் செயற்படும் அனைத்துக்கும் எதிராக போராடுவேன் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment