(இராஜதுரை ஹஷான்)
அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க இடமளிக்க முடியாது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க எடுத்த தீர்மானத்துக்கான காரணத்தை அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை என மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனுருத்த சோமதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்சார சபையின் முறையற்ற நிர்வாகத்தினால் 300 பில்லியன் ரூபா நட்டம் இதுவரையில் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும்.
மின்சார சபையின் பலவீனமான நிர்வாக தன்மையை மறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க முயற்சிப்பது நியாயமற்ற செயற்பாடாகும்.
மின்சாரத்துறையில் இடம்பெற்ற பல மோசடிகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு வெளிக் கொணர்ந்துள்ளது. முறைகேடுகளுடன் தொடர்புடைய பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க விரைவில் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எவ்வித அடிப்படை காரணிகளும் கிடையாது. உரிய காரணத்தையும் அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்கினால் மின்சாரத்துறையில் பல மோசடிகள் இடம்பெறும். இதனால் பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment