இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து விஞ்ஞான ரீதியில் பரிசோதனை செய்ய குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து விஞ்ஞான ரீதியில் பரிசோதனை செய்ய குழு நியமனம்

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக ஆயுர்வேத வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் கண்டுப்பிடிக்கப்பட்ட ஓளடதம் தொடர்பில் விஞ்ஞான முறையிலான பரிசோதனைகளுக்காக பேராசிரியர் சேனக்க பிலபிட்டிய தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கேகாலை மாவட்ட ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டார கொரோனா வைரஸை எதிர் கொள்வதற்காக தேசிய முறைகள் ஊடாக தயாரித்துள்ள ஒளடதத்தை வைரஸ் தொற்றாளர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலிலே இராஜாங்க அமைச்சர்களான, சன்ன ஜயசுமன, சிசிர ஜயகொடி, சுதர்சனிப்ரனாந்து பிள்ளை மற்றும் சீதா அரம்பேபொல ஆகியோரும், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சுகாதார அமைச்சின் உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சுகாதார அமைச்சர் ஐனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் இந்த தேசிய ஒளடதம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதால், அந்த ஒளடதம் தொடர்பான அடுத்த கட்ட பரிசோதனைகளை அரச மட்டத்தில் முன்னெடுக்குமாறும், இந்த நடவடிக்கைகளுக்கு ஏனைய அரச துறையினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஒளடதத்தை உலகம் பூராகவும் விநியோகிப்பதென்றால், அந்த ஒளடதம் தொடர்பான பரிசோதனைகளை விஞ்ஞான முறைகள் ஊடாக மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான யோசனைகளை உடன் தயாரிக்குமாறும் ஆலோசனை வழங்கினார். அ

தற்கமைய அந்த யோசனைகளை தயாரிப்பதற்காக பேராசிரியர் சேனக்க பிலபிட்டியவின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

இந்த குழுவில் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, பேராசிரியர்களான, சிசிர சிரிவர்தண, சரோஜா ஜயசிங்க, ஜனக்க த சில்வா, சேம் குலரத்ன மற்றும் காமினி வனிகசூரிய ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment