கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்புத் திட்டம் - கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்புத் திட்டம் - கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்பதற்காக 'வொல்பெக்கியா' பக்றீரியாவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முன்னோடி கருத்திட்டம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய நுண்ணுயிர் கட்டுப்பாட்டு முறைமையைக் கையாண்டு நுளம்புகள் மூலம் பரவும் நோய்களான டெங்கு, சிக்குன்குன்னியா, மற்றும் காய்ச்சல் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மொனாஸ் பல்கலைக்கழகத்தால் 'உலக நுளம்பு வேலைத்திட்டம்' எனும் பெயரில் சர்வதேச ஆராய்ச்சி பங்களிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் டெங்கு நோயை பரப்பும் ஈடிஸ் நுளம்பின் வைரஸ் தாக்கம் குறைத்து நோய் பரவுவதைக் குறைப்பதற்காக 'வொல்பெக்கியா' பக்றீரியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நுகேகொட சுகாதார மருத்துவப் பணிமனை பிரதேசங்களிலும் கொழும்பு நகர சபை பிரதேசங்களையும் தெரிவு செய்து குறித்த பக்றீரியாவைப் பயன்படுத்துவதற்கு கடந்த 09 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சும் மொனாஸ் பல்கலைக்கழகமும் பங்களிப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், அதன் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துள்ளது. 

குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மேற்கொண்டு பங்களிப்பு ஒப்பந்தத்தை நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment