கொளவேனிகம இரஜமஹா விகாரையை புனித பூமியாக அறிவித்து வர்த்தமானி வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 22, 2020

கொளவேனிகம இரஜமஹா விகாரையை புனித பூமியாக அறிவித்து வர்த்தமானி வெளியிட அமைச்சரவை அங்கீகாரம்

(இராஜதுரை ஹஷான்)

கொளவேனிகம இரஜமஹா விகாரையை புனித பூமியாக அறிவித்து வர்த்தமானி வெளியிட கலாச்சார அலுவலகம் அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாத்தறை மாவட்ட கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கொளவேனிகம இரஜமஹா விகாரை 400 வருடங்கள் பழமை வாய்ந்த தூபியும் பழமை வாய்ந்த வெள்ளரச பீடத்துடனும் கூடிய வரலாற்றுப் பெறுமதி கொண்ட பல்வேறுபட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன.

1931 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க பௌத்த விகாரைகள் கட்டளைச் சட்டத்தின் 4 (11) ஆம் உறுப்புரையின் கீழ் நிர்வகிக்கப்படும் 05 ஹெக்டேயர் காணியில் அமைந்துள்ள இவ்விகாரையின் வரலாற்றுப் பெறுமதிகளை கண்டுபிடிக்கும் அவசியம் உள்ளது.

அதற்கமைய, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் குறித்த இராஜமஹா விகாரையைப் பாதுகாக்கும் வகையில் திட்டமொன்று தயாரிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, செயற்படுவதற்காக 'கொளவேனிகம இராஜமஹா விகாரை புனித பூமிப் பிரதேசம்' 1946 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராமிய நிர்மாணிப்புக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment