பொதுமக்களை சரியான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ள பொலிஸ் பேச்சாளர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் பிழையான பொய்யான தகவல்களை வழங்குகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஏனையவர்களின் தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் அதற்காக மூன்று வருட சிறைத் தண்டனையை விதிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்களை வழங்குபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தண்டிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிசிஆர் சோதனைகளிற்கு தங்களை உட்படுத்தாத பலர் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடந்துகொள்பவர்கள் வேண்டுமென்றே வைரசினை பரப்புபவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவித்துள்ள பேச்சாளர் சுகாதார பாதுகாப்பு அதிகாரிகளுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment