பண்டாரகம அட்டுளுகம பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர் எச்சில் துப்பிய சம்பவம் காரணமாக அந்த பகுதி மக்களிற்கு சேவையாற்றுவது குறித்து சுகாதார சேவையை சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களிலும் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதி மக்களிற்கு சேவையை வழங்குவது பாதுகாப்பற்ற விடயமாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக எங்கள் சுகாதார பணியாளர்கள் ஆபத்தை எதிர்நோக்குவதற்கு அனுமதிக்க முடியாது எனவும அவர் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் மோசமாக நடத்தப்பட்டுள்ளமை ஏனைய கிராமத்தவர்களிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபரிற்கு எதிராக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தங்கள் சமூகத் தலைவர்கள் தெரிவித்ததை அவர்கள் செவிமடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment