கினிகத்தேனை, நோட்டன், மஸ்கெலியா ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன், கினிகத்தேனை, மஸ்கெலியா பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் இனங் காணப்பட்டதன் காரணமாக ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு கொரோனா தொற்று பிரதேச மாணவர்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் ஏனைய மாணவர்களும் ஆசிரியர்களும் வருகை தருவார்கள் என ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கடந்த மாதம் 30ஆம் திகதி இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். முடிவுகள் வெளியானதனை தொடர்ந்து கினிகத்தேனை பகுதியில் 06 பேர், நோட்டன் பகுதியில் 05 பேர், மஸ்கெலியா பகுதியில் ஒருவர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த இரண்டு பிரதேச மாணவர்களும் பாடசாலைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கினிகத்தேனை தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து நுவரெலியா மாவட்ட வைத்திய பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய கினிகத்தேனை பிளக்வோட்டர் பகுதியில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் மற்றும் நோட்டன் தண்டுகலா பிரதேசத்தில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் ஆகியோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment