பூட்டானில் 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, December 23, 2020

பூட்டானில் 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பூட்டான் நாட்டில் டிசம்பர் 23ம் திகதி முதல் அடுத்த 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பூட்டான் நாட்டிலும் கொரோனா தொற்றுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புது வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளூரில் புதிய வகை கொரோனா பரவலுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதனால் கடுமையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என முடிவானது.

எனவே டிசம்பர் 2-ம் திகதியில் இருந்து 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த ஊரடங்கால் தொற்று பரவலை அரசால் கட்டுப்படுத்த முடியும். சமூகங்களுக்குள் பரவல் ஏற்படுவதும் குறையும். 7 நாட்கள் ஊரடங்கை நாம் முடிவு செய்த போதிலும், இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளை தொற்று பரவல் தீர்மானிக்கும்.

கால்நடை தீவனம் உட்பட சரக்குகள், காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் இடையூறுகள் இருக்காது என அதற்குரிய அமைப்புகள் உறுதி செய்யும். பொதுமக்கள் தேவையான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad