இறுதித் தீர்மானம் நாளை என்கிறார் அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

இறுதித் தீர்மானம் நாளை என்கிறார் அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை அகற்றுவது தொடர்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி அறிவித்துள்ளார்.

தன்னுடைய அறிவிப்பில் மேலும், அக்கரைப்பற்று பிரதேச சபை, ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைகள் உட்பட அக்கரைப்பற்று மாநகர எல்லைகளில் சில பிரதேசங்கள் தவிர ஏனைய இடங்கள் நிபந்தனை அடிப்படையில் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்க ஆலோசிக்கப்பட்டாலும், இறுதி முடிவை நாளை இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னரே அறிவிக்க ஏற்பாடாகியுள்ளது என்றார்.

இருந்த போதிலும் இன்றும் சில தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment