யாழ்ப்பாணம் குருநகரில் ரி.என்.ரி. வெடி பொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குருநகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு டைனமைட் தயாரிக்கும் நோக்கில் ரி.என்.ரி. வெடி பொருளைத் தூளாக்க மீனவர் ஒருவர் முயன்றுள்ளார்.
எனினும் வெடி பொருள் கல்லுத்தன்மையாக காணப்பட்டுள்ளது. இதனால் அந்த வெடி பொருளை வீட்டில் இருந்த கிரைண்டரில் போட்டு குறித்த மீனவர் அரைத்துள்ளார். இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி வீட்டிலிருந்த 8 பேர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மூவர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment