நான் இறந்தால் எத்தனை பேர் வருவீர்கள் - நண்பிகளிடம் கேட்டுச் சென்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

நான் இறந்தால் எத்தனை பேர் வருவீர்கள் - நண்பிகளிடம் கேட்டுச் சென்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை

கிளிநொச்சி பிரமனந்தனாறு மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

நேற்று பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு நண்பிகளுடன் வீடு திரும்பும் போது சக மாணவிகளிடம் நான் இறந்தால் நீங்கள் எத்தனை பேர் வருவீர்கள் என கேட்டுச் சென்ற குறித்த மாணவி வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த மாணவி சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடிய பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரமனந்தனாறு 71 ஆம் வாய்க்கலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற க.பொ.த சாதாரண தர மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். 

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment