யாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் உயிரிழப்பு! - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

யாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். 

வயோதிபர் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 

அவரை கொவிட்-19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். 

மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு அரைவாசியாகக் குறைந்ததால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரது இறப்புத் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையை செய்வதா? அல்லது பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனையைச் செய்வதா ? என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

No comments:

Post a Comment