(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நல்லாட்சியில் மிகச்சிறந்த சேவையாக முன்னெடுக்கப்பட்ட 1990 அம்புயூலன்ஸ் சேவையை இன்று அரசியல் காரணங்களினால் நாசமாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் மக்களுக்கு இந்த அம்புயூலன்ஸ் சேவையினால் கிடைக்கும் நன்மைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 1990 சேவை இந்தியாவின் ரோ சேவை அல்ல எனவும் அவர் வாதிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று, 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், எமது ஆட்சியில் சுகாதார துறைக்காக முன்னெடுத்த மிகச்சிறந்த வேலைத்திட்டம் 1990 அம்புயூலன்ஸ் சேவையாகும். இதனை நான் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்த வேளையில் எனக்கு எதிராக மோசமான விமர்சனங்களை அப்போதைய எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர்.
நான் இந்தியாவின் ரோ அமைப்புடன் இணைந்து இந்த அம்புயூலன்ஸ்களை கொண்டுவந்ததாக கூறினர். இந்த ஆம்புலன்ஸில் பயணித்தால் மின்சாரம் தாக்கி உயிரிழக்க நேரிமும் என்றனர். ஆனால் இன்று 1990 அம்புயூலன்ஸ் சேவை மக்களுக்கு முழுமையாக பயனளித்து வருகின்றது. மக்கள் இன்று முழுமையாக 1990 சேவையை அங்கீகரித்துள்ளனர்.
இந்தியாவின் 23 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையில் இந்த திட்டத்தை நாம் ஆரம்பித்து பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்று பொதுவான தேசிய வேலைத்திட்டமாக இதனை ஆரம்பித்தோம்.
இதன்போது 297 அம்புயூலன்ஸ்களை பெற்றுக் கொண்டும். 2019 ஆம் ஆண்டுக்காக 2000 மில்லியன் ரூபாய்களை இந்த சேவைக்காக ஒதுக்கினோம். அவற்றில் 1600 மில்லியன் ரூபாய்கள் செலவானது. 2020 ஆம் ஆண்டுக்காக 1750 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியிருந்தோம்.
அதனை இன்றைய சுகாதார அமைச்சு கையாண்டு வருகின்றது. இந்த முயற்சி எமது கடிமையான உழைப்பின் வெற்றியாகும். இன்றும் 1990 நிருவனம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஏழு பேர் நிருவகித்து வகிக்கின்றனர்.
அத்துடன் சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றது. அவ்வாறு இருக்கையில் இன்று 1990 அம்புலன்ஸ் சேவையை அரசியலாக மாற்றி கடினமாக கட்டியெழுப்பிய எமது முயற்சியை நாசமாக்கிவிட வேண்டாம். அதில் சேவை செய்யும் அனைவரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment