(இராஜதுரை ஹஷான்)
இலங்கைக்கும் சிங்கப்பூரிற்கும் இடையிலான 50 வருட கால இராஜதந்திர தொடர்பினை நினைவு கூர்வதற்கான நினைவு முத்திரை "சமுத்திர உயிரியல் பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 50 வருட கால இராஜதந்திர தொடர்பினை நினைவு கூறுவதற்கு தபால் திணைக்களம் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் தபால் நிறுவனம் கூட்டிணைந்து இரண்டு முத்திரை வீதம் வெளியிட இரு தரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய இரு நாட்டுக்கும் பொதுவான வகையில் "சமுத்திர உயிரியல் பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளின் கீழ் முத்திரை அச்சிடவும், வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4000 ஆயிரம் முத்திரைகளும், 1000 நினைவு பத்திரங்களும் இரு நாடுகளுக்கிடையில் பறிமாற்றிக் கொள்ளப்படும்.
No comments:
Post a Comment