(செ.தேன்மொழி)
காட்டு யானைகள் பொலித்தீன் உள்ளிட்டவற்றை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விரிவுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டில் நீண்ட காலமாக காட்டு யானைகள் பொலித்தீன் உள்ளிட்ட குப்பைக் கூலங்களை உட்கொள்வது ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.
இதனை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைகளம் நடத்திய ஆய்வொன்றின் போது, அத்தகைய 54 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களை 15 இடங்கள் என்றளவுக்கு குறைப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இவ்வாறு குற்றைக்கப்படும் இந்த 15 இடங்களிலும் யானைகளால் அந்த குப்பைகளை உட்கொள்ள முடியாத வகையில் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்போது, ஏற்கனவே ஒன்பது பகுதிகளில் யானைகள் வருகை தருவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய ஆறு பகுதிகளில் அம்பாறை - அட்டாளைச்சேனை மற்றும் புத்தங்கல ஆகிய இரு பகுதிகளிலும் காணப்படும் குப்பை சேகரிக்கும் பகுதிகளுக்கு யானைகள் வருவதை தடுப்பதற்காக மின் வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய மீதமுள்ள நான்கு பகுதிகளிலும் யானைகளால் வரமுடியாத வகையில் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, இவ்வாறான குப்பைகளை அகற்றும் போது உரிய விதிமுறையொன்றை கடைப்பிடிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
No comments:
Post a Comment