அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள பைடன் தொடர்பாளர் குழுவில் முழுவதும் பெண்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள பைடன் தொடர்பாளர் குழுவில் முழுவதும் பெண்கள் நியமனம்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் நிர்வாகத்திற்கு முழுவதும் பெண்கள் அடங்கிய செய்தித் தொடர்பாளர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்திப் பிரிவு தலைவராக, முன்னாள் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியை அவர் நியமித்துள்ளார்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை கவனித்த கேட் பெடிங்பீல்ட் வெள்ளை மாளிகை தகவல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசார மூத்த ஆலோசகர் சீமோன் சேன் செண்டர்ஸ், துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசின் தலைமைப் பேச்சாளராக நியமனம் பெற்றுள்ளார்.

புதிய அணியினர் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டவர்கள் என்றும், நாட்டை மறு வடிவமைக்க கூட்டாகக் கடப்பாடு கொண்டவர்கள் என்றும் பைடன் கூறினார்.

பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாம் தோல்வி அடைந்த தேர்தல் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முயன்று வரும் நிலையில் பைடன் வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Post a Comment