இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி கல்கிஸை பகுதியில் வைத்து ரஞ்சன் சில்வா சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் நடந்ததையடுத்து சந்தேக நபர் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பின்னர் நீதிமன்றினூடாக சந்தேக நபரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியுடன் சந்தகநபரான தர்மசிறி பெரேரா என்பவர் நவம்பர் 29 ஆம் திகதி அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது இந்த கைது நடவடிக்கையை இலங்கையில உள்ள இன்டர்போல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை கைதான சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தர்மசிறி பெரேரா செய்த குற்றங்கள் குறித்தும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment