அரசாங்கத்தின் கீழ்த்தரமான ஜனாசா எரிப்பு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிப் போராட்டம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Monday, December 21, 2020

அரசாங்கத்தின் கீழ்த்தரமான ஜனாசா எரிப்பு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிப் போராட்டம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

(எம்.ஆர்,எம்.வஸீம்)

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை (ஜனாஸா) அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பது மிகவும் மனிதாபிமானமற்ற செயலாகும். அரசாங்கத்தின் இந்த கீழ்த்தரமான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுதினம் புதன்கிழமை பொரளை கனத்தைக்கு முன்னால் அமைதி போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதுளை குருத்தலாவ பிரதேசததில் இன்று இடம்பெற்ற மக்கள் சக்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் காரணமாக மரணிப்பவர்களை எரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தால், இந்த நாட்டின் பிரஜைகளான முஸ்லிம் சமூகத்தின் மார்க்க உரிமை மீறப்பட்டிருக்கின்றது.

கொவிட்டால் மரணிப்பவர்களை தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் முடியும். அதனால் எந்த பாதிப்பும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெளிவாக தெரிவித்திருக்கும் நிலையில் எமது நாட்டில் மாத்திரம் எரிக்க மாத்திரம் தீர்மானித்திருப்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.

அத்துடன் கொவிட் தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரமே மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் கொவிட்டில் மரணிப்பவர்களை தகனம் செய்வது மற்றும் எரிப்பது என்ற விடயத்தில் மாத்திரம் அரசாங்கம் எரித்தேக ஆக வேண்டும் என்ற தீர்மானத்திலே இருக்கின்றது. 

நாட்டில் இருக்கம் அனைத்து இன மக்களதும் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் இந்த கீழ்த்தரமான தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாக எதிர்க்கின்றது. அதனால் கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுதினம் புதன்கிழமை கொழும்பு பொரளை கனத்தைக்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment