இரு ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து கொலன்னாவை தபால் நிலைய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதேநேரம் கொலன்னாவை தபால் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆறு துணை தபால் நிலையங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் தபால் நிலைய வளாகங்களை கிருமி நீக்கம் செய்த பின்னர் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, குருணாகல் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள உப தபால் அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
குருநாகல் பிரதேசத்தின் தபால் அதிகாரியின் அலுவலகம் மற்றும் குருநாகல் பிரதான தபால் காரியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றும் 14 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதன் காரணமாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment