அரசாங்கத்தின் பொறுப்பை வர்த்தக அமைச்சு நிறைவேற்றி வருகிறது : அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 23, 2020

அரசாங்கத்தின் பொறுப்பை வர்த்தக அமைச்சு நிறைவேற்றி வருகிறது : அமைச்சர் பந்துல குணவர்தன

(செ.தேன்மொழி)

தேசிய கைத்தொழிலாளர்களை முன்னேற்றுவதற்காக அரசாங்கத்தின் பொறுப்பை வர்த்தக அமைச்சு நிறைவேற்றி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயர்தர கூரைத் தகடுகள் உற்பத்திக்கான 'பேடன்ட்' அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பவர்களான, ஐ.டீ.ஈ.ஏ. நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் ஊடாக உள்நாட்டு சந்தைக்கு விநியோகிப்பது சம்பந்தமான உடன்படிக்கை கைச்சித்திடப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகம் பூராகவும் அஸ்பஸ்டாஸ் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக கவனம் செலுத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில்,தேசிய மூலப் பொருட்களைப் பயன்படுத்தி, உயர்தர தயாரிப்புத் தரத்தையும், சுகாதார மற்றும் சுற்றாடல் தரங்களை பேணியும், பலகாலம் பயன்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த கூரைத்தகடு உற்பத்திக்காக, அரச பல்கலைக்கழகங்களினூடாக தோன்றிய தேசிய கைத்தொழிலாளரான ஐ.டீ.ஈ.ஏ. நிறுவனத்தின் உரிமையாளரான சம்பத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேசிய கைத்தொழிலாளர்களை கைத்தூக்கி விடுவதற்காக இன்றைய அரசின் சௌபாக்கிய நோக்கு கொள்கை பிரகடனத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி, உரிய பொறுப்புகளை நிறைவேற்ற வர்த்தக அமைச்சர் என்ற வகையில் எனக்கு கடப்பாடு உண்டு. 

இந்நிலையில் தேசிய உற்பத்தியான இந்த கூரைத் தகடுகளை விநியோகிக்கும் முழுமையான உரிமையையும், ஏகபோகத்தையும் அரசாங்கம் தனதாக்கிக் கொண்டு, உயர்தரத்தில் உற்பத்தி செய்யப்படும் இத்தகைய தேசிய உற்பத்திகளை, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை மற்றும் நியாய விலைக் கொள்கையினடிப்படையில் விநியோகிப்பதற்காக, அரச பல்நோக்கு கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் இது போன்ற உயர்தரத்திலான கண்டு பிடிப்புகளை இந்தியா உட்பட ஏனைய உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது நாம் பெற்ற வெற்றியாகும். இதற்காக துறைச்சார்ந்த அமைச்சர் என்ற வகையில் உற்பத்தியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது , இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, வர்த்தக அமைச்சின் செயலாளர், அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபன தலைவர், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர், லக் சதொச நிறுவன தலைவர், வாடிக்கையாளர் சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment