பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது

மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதாக பிரண்டிக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் தேவைகளுக்கு உட்பட்டு இன்று தொழிற்சாலையை மீண்டும் திறக்க சுகாதார அதிகாரிகள் அனுமதியளித்ததாக பிரதேச பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி வெட்டும் பிரிவிலுள்ள 150 ஊழியர்கள் இன்று தொழிற்சாலை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி கொவிட்-19 தொற்றாளர் இனங்காணப்பட்டு ஒரு நாளின் பின் பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டது.

அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 1500 தொழிலாளர்களில் 1000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment