தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் - மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 12, 2020

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் - மனோ கணேசன்

முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே, அவர் குறித்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பிலும், தடுப்புக்காவலில் உள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பிலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருவதாகவும் மனோ கணேசன் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அதற்கு இணையாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும், தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என மனோ கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment