இந்தோனேசியாவில் எரிமலை குமுறல் : பலரும் வெளியேற்றம் : விமான நிலையம் மூடல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

இந்தோனேசியாவில் எரிமலை குமுறல் : பலரும் வெளியேற்றம் : விமான நிலையம் மூடல்

இந்தோனேசியாவில் ஈலே லேவோதோலோக் எரிமலை குமுற ஆரம்பித்ததை அடுத்து 4,400 க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கில் உள்ள நுசா தெங்காரா வட்டாரத்தில் அந்த எரிமலை அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வார இறுதியில் அது குமுற ஆரம்பித்தது.

எரிமலை கக்கிய சாம்பல் விண்ணில் 4 கிலோ மீற்றர் உயரம் வரை சென்றதால், விமானங்களுக்கு அதுகுறித்து எச்சரிக்கப்பட்டது. உள்ளூர் விமான நிலையமும் மூடப்பட்டது. 

இதுவரை உயிருடற் சேதம் குறித்த தகவல் ஏதுமில்லை. இருப்பினும் குடியிருப்பாளர்கள் எரிமலைச் சாம்பலிலிருந்து காத்துக் கொள்ள முகக் கவசம் அணியும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது. கொதிநிலையில் எரிமலைக் குழம்பு வெளியாகக் கூடும் என்றும் அது குறித்து விழிப்புடன் இருக்கும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் இந்த எரிமலை அவ்வப்போது சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தோனேசியாவில் இயக்கம் கொண்ட சுமார் 130 எதிமலைகள் காணப்படுகின்றன

No comments:

Post a Comment