இம்மாத இறுதிக்குள் 5,000 கைதிகள் விடுவிக்கப்படுவர் - இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த - News View

About Us

About Us

Breaking

Saturday, December 12, 2020

இம்மாத இறுதிக்குள் 5,000 கைதிகள் விடுவிக்கப்படுவர் - இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த

இம்மாத இறுதிக்குள் கிட்டத்தட்ட 5,000 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

தற்போது 29 சிறைச்சாலைகள் மற்றும் இரண்டு புனர்வாழ்வு நிலையங்களிலும் 25,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட நிலையங்களின் 11,200 பேரை மட்டுமே தடுத்து வைக்க முடியும் என்றும் லொஹான் ரத்வத்தே சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கடமைகளை ஏற்றுக் கொண்டதிலிருந்து 3,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் 5,000 கைதிகளை டிசம்பர் இறுதிக்குள் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சிறு குற்றங்களுக்கு அபராதம் செலுத்த முடியாத கைதிகளும் பிணையில் செல்ல முடியாதவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment