நாடு முழுவதும் பரவும் நிலையில் கொரோனா - சமூகத்திற்குள் பேராபத்து வரும் என GMOA எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 12, 2020

நாடு முழுவதும் பரவும் நிலையில் கொரோனா - சமூகத்திற்குள் பேராபத்து வரும் என GMOA எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் சமூகத்திற்குள் வந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வீடுகளில் தங்கி இருக்கும் நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நிலைமைக்கு அமைய இது உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினர் கூறுவது போல் அடையாளம் காணப்படும் அனைத்து நோயாளிகளும் மினுவங்கொடை கொத்தணிக்கு உரியவர்கள் அல்ல.

இந்த நிலைமையில் சமூகத்திற்குள் தற்போது பெரிய ஆபத்து உருவாகியுள்ளது. மேல் மாகாணத்தில் காணப்பட்ட கொரோனா பரவல் ஆபத்து தற்போது நாடு முழுவதும் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

உலகில் கொரோனா பரவும் நாடு வரிசையில் இலங்கை 95வது இடத்திற்கு முன்னேரியுள்ளது எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment