கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த 24 மணித்தியாலங்களில் 221 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் தொழில் வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை நேற்றைய தினம் மத்திய கிழக்கு நாடு மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றிலிருந்து 100 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் அந்த நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 100 பேரே அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் நேற்று மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சிங்கப்பூரிலிருந்து எட்டுப் பேரும் சவுதி அரேபியா ரியாத்திலிருந்து 50 பேரும் கட்டாரில் இருந்து 42 பேரும் ஆவர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றின் தாதிகளால் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment