18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ”புரெவி புயல்” - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் ”புரெவி புயல்”

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இலங்கையின் திருகோணமலையில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பனிலிருந்து 420 கிலோ மீட்டர் குமரியிலிருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.

புரெவி புயல் மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திருகோணமலை அருகே புரெவி புயல் கரையை கடக்கிறது கரையை தடடி கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment