15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

15 லட்சத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கபட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 727 பேரும், மெக்சிகோவில் 825 பேரும், இத்தாலியில் 684 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

அதேபோல், பிரேசிலில் 669 பேரும், இங்கிலாந்தில் 648 பேரும், போலாந்தில் 609 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 48 லட்சத்து 1 ஆயிரத்து 373 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 84 லட்சத்து 4 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 92 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 98 ஆயிரத்து 182 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 2,79,763
பிரேசில் - 1,74,531
இந்தியா - 1,38,122
மெக்சிகோ - 1,06,765
இங்கிலாந்து - 59,699
இத்தாலி - 57,045
பிரான்ஸ் - 53,816
ஈரான் - 48,990
ஸ்பெயின் - 45,784

No comments:

Post a Comment