வெனிசுவேல கடலில் 14 பேரின் சடலங்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

வெனிசுவேல கடலில் 14 பேரின் சடலங்கள் மீட்பு

வெனிசுவேலாவில் இருந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டுக்குச் செல்ல முயன்ற 14 பேரின் சடலங்கள் வெனிசுவேலா கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி, வேலையின்மை மற்றும் போதுமான அத்தியாவசிய பொதுச் சேவைகள் இல்லாமை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய குறைந்தது 40,000 வெனிசுவேலா நாட்டவர்கள் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் வெனிசுவேலாவின் குயிரியா நகரில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் கடந்த சனிக்கிழமை அந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எவரும் காணாமல் போனவர்கள் பற்றி முறையிட முன்வராத நிலையில் வெனிசுவேலா நிர்வாகம் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது. குற்ற கும்பல்களின் தொடர்பு பற்றியும் அது விசாரித்து வருகிறது. 

குயிரியா நகரில் இருந்து கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி 20 க்கும் மேற்பட்டோருடன் படகு ஒன்று புறப்பட்டிருப்பதாக டிரினிடாட் மற்றும் டொபாகோ வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பில் இதுவரை எந்த விபரமும் வெளிவரவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment