இலங்கை விமானப்படை பயிற்சி விமானமொன்று, கந்தளாய், சூரியபுர பகுதியிலுள்ள ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படை இதனை உறுதி செய்துள்ளது.
சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி மாத்திரம் பயணித்த, PT-6 எனும் குறித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (15) பிற்பகல் 1.06 மணியளவில் (FTW) பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், விமானியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலில் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்விமானம் பிற்பகல் 1.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் நொருங்கிய விமானத்தினுள் சிக்கிய விமானியை மீட்கப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக, வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
கடேட் வீரரான KRSVB அமரகோன் (12440) எனும் 23 வயதான நபரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment