பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்குமாறு பெசிலுக்கு அழைப்பு - SLPP எம்பிக்கள் எழுத்து மூலம் கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்குமாறு பெசிலுக்கு அழைப்பு - SLPP எம்பிக்கள் எழுத்து மூலம் கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்குமாறு பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 19 பேரின் கையொப்பத்துடன் அவருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. 

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை கருத்திற் கொண்டும் பொதுஜன பெரமுனவின் முழுமையான ஒத்துழைப்பை நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கவும் பசில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் வர வேண்டும் என அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. 

பசில் ராஜபக்‌ஷவை தவிர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தொடர்பில் சிந்திக்க முடியாதெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்களான, சம்பத் அத்துகோரள, மேஜர் பிரதீப் உந்துகொட, அங்கஜன் ராமநாதன் காதர் மஸ்தான், டொக்டர் உபுல் கலப்பத்தி, அஷோக்க பிரியந்த, சஞ்சீவ எதிரிமான்ன, சஹன் பிரதீப் விதான, அகில சாலிய எல்லாவள நாலக பண்டார கோட்டேகொட, அமரகீர்த்தி அத்துகோரள, வசந்த யாப்பா பண்டார, டப்ள்யூ.டி.வீரசிங்க, எச்.நந்தசேன, குமாரசிறி ரத்னாயக்க, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய, ராஜிகா விக்ரமசிங்க, நிபுண ரணவக்க, கபில அத்துகோரள ஆகியோர் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். 

குறித்த கடிதம் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கருத்துத் தெரிவிக்கையில், பெசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க வேண்டும். எமது கட்சியை ஸ்தாபித்து 2 ஜனாதிபதிகளையும் உருவாக்கியுள்ளார்.

உள்ளூராட்சி, பொதுத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில், அவரின் தலைமையில் வெற்றி பெற முடியுமானால் அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்து அமைச்சு பதவியை பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். 

எதிரணிகள் அவர் தொடர்பில் அச்சமடைந்தே அவரை விமர்சிக்கின்றனர். அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதை நாம் ஆவலோடு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad