பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

(செ.தேன்மொழி)

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்து வரும் அல்லது அப்பகுதிகளில் பணி புரிந்து வரும் கர்ப்பிணி தாய்மார்களான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு வயதையும் விட குறைவான வயதுடைய பிள்ளைகளின் தாய்மாரான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொழிலுக்கு சமுகமளிக்க தேவையில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் அல்லது அந்த பகுதிகளில் காணப்படும் பொலிஸ் நிலையங்களில் பணி புரிந்து வரும் கர்ப்பிணி தாய்மார்களான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு வயதையும் விட குறைவான வயதுடைய பிள்ளைகளின் தாய்மாரான பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொழிலுக்கு சமூகமளிக்க தேவையில்லை.

இந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதால், இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறான சந்தர்ப்பகளில் இவர்கள் ஊடாக அவரது குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் அனைவரையும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அனைத்து பொலிஸ் பிரிவுகளின் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ்மா அதிபர் அறிவுத்தலும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீடுகளில் இருக்கும் காலத்தில் அவர்களது ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அது வழமையைப் போன்றே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment