அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை நெருங்கி உள்ள ஜோ பைடன், எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் எதிரிகள் கிடையாது என குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறார். ஆனால் வாக்கு எண்ணுவதை நிறுத்த குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
இருவரும் இப்படி மறைமுகமாக மோதி வரும் நிலையில் ஜோ பைடன் ட்விட்டர் பதிவுகள் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், ‘நாம் எதிரெதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது, நாம் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியலின் நோக்கம் முற்றிலும் இடைவிடாத போர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’ என பைடன் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment