ஜோ பைடனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

ஜோ பைடனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விரைவில் வெற்றி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்திருக்கும் ஜோ பைடனுக்கு அமெரிக்க புலனாய்வுச் சேவை பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

அமெரிக்க நேரப்படி நேற்று வெள்ளிக்கிழமை அவர் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்த நிலையில் அவரின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி அவரது பிரசாரக் குழுவினர் கேட்டுக் கொண்டதை அடுத்தே புலனாய்வுச் சேவை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

எனினும் இது பற்றி கருத்துக் கூற புலனாய்வுச் சேவை பேச்சாளர் கத்தரின் மில்ஹோன் மறுத்துள்ளார். முக்கிய புள்ளிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பற்றி கருத்துக் கூற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். பைடன் உதவியாளர்களும் இதுபற்றி கருத்து வெளியிடவில்லை.

ஜனாதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டதும் அவருக்கு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவது வழமை. வான்பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படும் என அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒரு வாரகாலமாகவே ஜோ பைடனிற்காக ஒரு பிரிவினர் தயார் நிலையிலிருந்தனர் என அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜோ பைடன் மற்றும் அவரது பிரசாரக் குழுவினர் டெல்வாரில் வில்மிங்கடனை மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment