20ஆவது திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமையின் விளைவாக மக்களின் இறையாண்மை முன்னிலைப்படுத்தும் நாட்டுக்கு பொருத்தமான முழுமையான அரசியலமைப்பொன்றை ஒரு வருட காலப்பகுதிக்குள் அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன் பிரகாரம் புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நடத்தியுள்ள விசேட சந்திப்பிலேயே இந்தவிடயத்தை தெரிவித்துள்ளார்.
‘ஒரு நாடு - ஒரு சட்டம்’ என்பது புதிய அரசியலமைப்பின் அடிப்படையாகும் என்பதுடன், நிலையான ஒற்றையாட்சி நாட்டை கட்டியெழுப்புவது எதிர்பார்ப்பாகும்.
அராஜகத்தை ஒழிக்கவும் புதிய அரசியலமைப்பை உருவாக்கவுமே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment