உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் ஊடகச் செயலாளர் சமீர பிரபாஷ் விஜேசிங்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தொழிற்சாலைகளுக்குத் தேவையான அயடின் அல்லாத உப்வு, நுகர்வுக்கான அயடின் கலந்த உப்பு ஆகியவற்றின் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 10 ஆம் திகதி வரை இவ்வாறு உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment