சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம் - மீரிகமவில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் மரணம் - மீரிகமவில் சம்பவம்

வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக மீரிகம சுகாதார வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மீரிகம - பல்லேவெல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 68 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்து விட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாதுபிட்டிவல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து இப்பகுதியில் உள்ள சில வீடுகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment