கொழும்பு முகத்துவாரம் பகுதியில் மேலும் 32 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் மேலும் 32 பேருக்கு கொரோனா

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் மேலும் 32 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்பிலுள்ளவர்களில், முதலாம் கட்டத்தினருக்கே தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்தார்.

முகத்துவாரம் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு நகரில் 400 பிசிஆர் பரிசோதனைகளை இன்று முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த 23 வயது இளைஞர் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment